தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? புதிய தகவல்!!

5
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? புதிய தகவல்!!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? புதிய தகவல்!!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? புதிய தகவல்!!

கொரோனா 2 ஆம் அலை காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டுமாக திறப்பது குறித்த ஆலோசனைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகள் திறப்பு குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பேரலை காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், இன்று வரை முழுமையாக திறக்கப்படவில்லை. அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு வீதமானது சற்று குறைந்து வந்த நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கியது. ஆனால் குறைந்த நாட்களே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா 2 ஆம் அலை தாக்கத்தினால் பள்ளிகள் மீண்டுமாக மூடப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

மீண்டுமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தவிர 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கடந்த கல்வியாண்டை போலவே இந்த ஆண்டும் +2 மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்யமுடியாததால், தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மேலும் +2 பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

பழைய 5 ரூபாய் தாளுக்கு ரூ.20,000 – தவறாமல் படிங்க!

இதில் 60 சதவீதம் பேர் தேர்வுகளை நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஜூன் 20 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் அதற்கான காரணத்தையும் கூறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு கூடிய விரைவில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

  1. எப்பவும் தப்பான நியூஸ் போட வேண்டும் என்று ஆசையா? தலைப்பு தேவையில்லாமல் பொய் வேறு. +2 தேர்வு 05/06/2021 அன்று ரத்து ஆகிவிட்டது. இன்னும் பழைய செய்தி. எப்படியோ உங்க website traffic அதிகப்படுத்த உண்மைக்கு மாறான செய்தி போட்டு கொண்டே இருக்கிறீர்களா. திருந்துங்கள். கற்பனை அல்லது பொய் மட்டும் தான் உங்கள் website முன்னேற வழி என்று கருத வேண்டாம். உண்மை சொன்னால் என்றும் முன்னேற முடியும்.

  2. 15 நாட்கள் முன்னே அமைச்சர் சொல்லிவிட்டார். இப்போதைக்கு பள்ளிகள் திறக்க முடியாது. கொரோனா முழுமையாக முடிந்த பின்னர் தான் அதை பற்றி முடிவு செய்யப்படும் என்று. இப்படி பொய் செய்தி சொல்லி தான், மக்கள் & பெற்றோர் எப்போது திறக்க போகிறார்கள் என்று பேசி பேசி போன வருடம் என்ன ஆச்சு? கொரோனா தொற்று தான் உயர்ந்தது. பள்ளி, கல்லூரி திறந்துதான் பெரிய தவறு. 9-12 & கல்லூரி மாணவர்கள் வந்ததுக்கு இவ்வளவு தொற்று. இளம் வயது கொரோனா பாதிப்பு அதிகம் ஆக காரணம். பள்ளி கல்லூரி ஆசிரியர் நிறைய பேர் இறப்பு. இதை பற்றி யாரும் கவலைப் படாமல் இருக்கிறார்கள். எந்த பள்ளி,கல்லூரியும் எந்த அரசு ஆணையும் கடைபிடிக்கவும் இல்லை. மாணவர்கள் வீட்டில் இருந்து வரும் போக்குவரத்து எவ்வளவு கூட்டம் கூட்டமாக இருக்கிறது தெரியுமா? அங்கே ஒருவருக்கு பாதிப்பு இருந்தாலும் அது எவ்வளவு பேரை பாதிக்கும். மாணவன் வந்தாலும் சரி இல்லை என்றாலும். ஆசிரியர் கண்டிப்பாக வர வேண்டும். அவர்கள் பாதிக்க பட்டால் கவலை இல்லை. அவர்களுக்கு 50% ஊதியம் தான் இதுவரை. வாங்கும் 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம். அதிலும் 50%. இது உண்மை செய்தி. உங்கள் website இதை பற்றி எதுவும் பேசவில்லை. என்ன உங்கள் நியாயம்?

  3. Kind Attention and Request to Modi ji…Kindly introduce permanent Online Education System ( Option) Our children are emotionally and Academically good at home without outsider’s stress

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!