தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு!!
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்தது குறித்து ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்வு ரத்து:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு 10 மாதங்களாக ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்ற நோக்கில் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
TN Job “FB
Group” Join Now
அதேபோல 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டு 2 மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டங்களை முடிக்க அரசு தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறையை தமிழக அரசு கொண்டு வந்தது. அந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.
மகளிர் சுயஉதவிக்குழு & நகைக்கடன்கள் தள்ளுபடி – முதல்வர் அறிவிப்பு!!
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார். இதன் காரணமாக தமிழக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில்,”பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் பாடங்களை இன்னும் நடத்தி முடிக்காமல் திணறி வரும் நேரத்தில் தமிழக முதல்வரின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது”, இவ்வாறு தெரிவித்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
So sad 12th kum exam cancel paneeru Kalame