
தமிழகத்தில் இன்று (டிச. 9) 29 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் “மாண்டஸ்” புயல் தாக்கம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 29 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச. 9) விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (டிச.8) புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயலானது இன்று இரவு கரையை கடக்க இருக்கிறது. அதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இன்று (டிசம்பர் 9) ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. அதே போல இன்று (டிச.9) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 29 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் – 150 கிலோ இலவச அரிசி.. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!
அதன் படி சென்னை, காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் ,திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, நாகப்பட்டினம், திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி – பள்ளிகளுக்கு மட்டும், கொடைக்கானல், சிறுமலை (வட்டம்), தூத்துக்குடி, கரூர், கிருஷ்ணகிரி – பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.