தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு எழுதாத 50ஆயிரம் மாணவர்கள் – விசாரணையில் வெளிவந்த உண்மை! அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு எழுதாத 50ஆயிரம் மாணவர்கள் - விசாரணையில் வெளிவந்த உண்மை! அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு எழுதாத 50ஆயிரம் மாணவர்கள் - விசாரணையில் வெளிவந்த உண்மை! அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு எழுதாத 50ஆயிரம் மாணவர்கள் – விசாரணையில் வெளிவந்த உண்மை! அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கும் நிலையில், இந்த ஆண்டு 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் உண்மை வெளியாகி இருக்கிறது.

பொதுத்தேர்வு மாணவர்கள்

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை மூன்று தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், முதல் தேர்வில் சுமார் 50000 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதனால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்கப்படும் என்பதால் அவர்கள் தேர்வுக்கு வராததற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுருந்தார்.

2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த இடங்களின் பட்டியல் – இந்தியாவை சேர்ந்த இரு நகரங்கள் தேர்வு!

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வராத பல மாணவர்கள் ஐடிஐ, மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் கொரோனா காலகட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு தேர்ச்சி வழங்கப்பட்டு மாற்று சான்றிதழ் இல்லாமல் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சான்றிதழ்களை நேரடியாக வந்து பெறும் வரை வருகை பதிவேட்டில் பெயரை நீக்க கூடாது என அரசு அறிவித்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!