தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு கட்டண விவரங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கம் தற்போது வெளியிட்டுள்ளது.

தேர்வு கட்டண விவரங்கள்:

தமிழகத்தில் 2022- 2023 ஆம் கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை சமீபத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – 13.03.23 முதல் 03.04.23 வரையிலும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர். ,அத்துடன் மொத்தம் 3,169 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் – பணத்தை இழக்கும் மக்கள்.. டிஜிபி விடுத்த முக்கிய எச்சரிக்கை!

தற்போது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் படி, தேர்வு கட்டணத்தில் இருந்து தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு மட்டும் ரூ.225, செய்முறை அல்லாத பாடத்திற்கு ரூ.175 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு கட்டணத்தை 06.01.2023 முதல் 20.01.2023 க்குள் www.dge.tn.gov.in என்ற தேர்வு துறையின் இணையதளத்தில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
  • மார்ச் 13 – தமிழ்
  • மார்ச் 15 – ஆங்கிலம்
  • மார்ச் 17- கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல்
  • மார்ச் 21 – இயற்பியல், பொருளியல்
  • மார்ச் 27 – கணிதவியல், விலங்கியல், வணிகவியல்
  • ஏப்ரல் 3 – வேதியியல், அக்கவுன்டன்சி, புவியியல் தேர்வு

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!