தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம் – கால அட்டவணை விரைவில் வெளியீடு!!

0
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம் - கால அட்டவணை விரைவில் வெளியீடு!!
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம் - கால அட்டவணை விரைவில் வெளியீடு!!
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம் – கால அட்டவணை விரைவில் வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளும் செயல்படுத்தி வருகின்றன. மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதத்தில் தான் நடைபெறும் என்பதால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

பொதுத்தேர்வு நடவடிக்கைகள்:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டு 10 மாதங்கள் முடிவடைந்த நிலையில் ஆன்லைன் மூலமாக பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன.

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பொதுத்தேர்வு தேதி அட்டவணை, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு பின் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் தான் நடைபெறும். எனவே 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் தேர்வுகள் நடத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் வங்கி வேலைவாய்ப்பு 2021 – உடனே பதிவு செய்யுங்கள்

பள்ளிகளில் வருகைப்பதிவு கட்டாயமில்லை எனவும் மாணவர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் சில மாணவர்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை கவனித்து வருகின்றனர். தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியை இன்று முதல் அனைத்து பள்ளிகளும் தொடங்கியுள்ளது. அதில் ஆன்லைன் மூலமாக பயிலும் மாணவர்களின் பட்டியலும் இணைக்கப்பட உள்ளது.

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.15,000 தொகுப்பூதியம் வழங்கல் – அரசாணை வெளியீடு!!

மேலும் தனியார் முறையில் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களையும் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களின் முழு பட்டியல் தயார் செய்து பிறகு அவர்களின் விவரங்கள், புகைப்படம், 10 மற்றும் 11ஆம் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றை சேர்ந்து கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும்.  இதனால் விரைவில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!