தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் – அரசு தேர்வுத்துறையிடம் கோரிக்கை!!

1
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் - அரசு தேர்வுத்துறையிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் - அரசு தேர்வுத்துறையிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் – அரசு தேர்வுத்துறையிடம் கோரிக்கை!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் உயிரியல், வேதியியல் உட்பட ஐந்து பாடங்களுக்கு விடுமுறை நாட்களை அதிகரிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொதுத்தேர்வு விடுமுறை நீட்டிப்பு:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் மே மாதம் 21 ஆம் தேதி வரை நடத்தப்படும் என அதற்கான அட்டவணையை பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

இவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளில் வேதியியல், உயிரியல், வரலாறு, புவியியல், தாவரவியல், கணக்கு பதிவியல் ஆகிய தேர்வுகளுக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதாவது கணிதம் உள்ளிட்ட தேர்வுகள் மே 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அடுத்து ஒரு நாள் விடுமுறை விட்டு 19 ஆம் தேதி உயிரியல், வரலாறு, தாவரவியல் பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. அதன்பின் ஒரு நாள் விடுமுறைக்கு பின் வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் மாற்றங்கள் – மத்திய அரசு அறிவிப்பு!!

இந்த பாடங்களின் மதிப்பெண்கள் அனைத்தும் நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும், வணிக படிப்பு பயில உள்ள மாணவர்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே இந்த தேர்வுகளில் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும்.

தமிழக வருவாய்த்துறை காலிப்பணியிடங்கள் நிரப்ப உத்தரவு – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

எனவே இந்த பாடங்கள் நடைபெறும் தேர்வுகளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கினால். மாணவர்கள் நன்றாக தயாராகி தேர்வு எழுத முடியும் என கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அரசு தேர்வுத்துறை இதனை பரிசீலனை செய்து தேர்வு நாட்களில் மாற்றம் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!