தமிழகத்தில் ஆன்லைனில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – ஆசிரியர் கழகத்தினர் தீர்மானம்!!

2
தமிழகத்தில் ஆன்லைனில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஆசிரியர் கழகத்தினர் தீர்மானம்!!
தமிழகத்தில் ஆன்லைனில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஆசிரியர் கழகத்தினர் தீர்மானம்!!
தமிழகத்தில் ஆன்லைனில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – ஆசிரியர் கழகத்தினர் தீர்மானம்!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சில மாற்றங்களை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவ‌ட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுதேர்வு மாற்றம்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தன. அதன் பின்னர் உயர்கல்வி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மாணவர்களுக்கு பரவியதால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு மே மாதம் 3ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தேதிகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டு மே மாதம் 5 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவ‌ட்ட பொதுக்குழு கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழக பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை மே மாதம் தொடக்கம் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!

அதில் கடந்த ஆண்டு வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 3.15 மணி நேரம் நடைபெற்றது. ஆனால் அப்போது 100 மதிப்பெண்ணுக்கு மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தற்போது 90/70 மதிபெண்களுக்கு 3.15 மணி நேரம் அதிகமாக உள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தில் புதிய கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பு – எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்!!

எனவே மாணவர்களின் மனநிலை கருத்தில் கொண்டு 2.45 மணி நேரமாக குறைக்க வேண்டும். மேலும் தற்போது கொரோனா காரணமாக கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுவது போல பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. There is no possible to conduct online exam for twelveth, if they conduct the exams in online all will get good marks and centum also by copying

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!