11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் பட்டியல் – பிப்ரவரி 11 கடைசி நாள்!!

0
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் பட்டியல் - பிப்ரவரி 11 கடைசி நாள்!!
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் பட்டியல் - பிப்ரவரி 11 கடைசி நாள்!!
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் பட்டியல் – பிப்ரவரி 11 கடைசி நாள்!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியலை EMIS இணையதளத்தில் 01.02.2021 முதல் 11.02.2021 தேதிக்குள் பதிவேற்றம் செய்து தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கொரோனா காரணமாக மூடப்பட்டன. இந்நிலையில் 10 மாதங்களுக்கு பின் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

நீட் தேர்வு 2021 தேதி அறிவிப்பு – மத்திய அரசிடம் மாணவர்கள் கோரிக்கை!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2020-21 ஆம் ஆண்டுக்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை தயார் செய்து அதனை 27.01.2021 தேதி முதல் 06.02.2021 வரை EMIS PORTAL இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சரிபார்த்த பின்னர், 01.02.2021 முதல் 11.02.2021 வரையிலான தேதியில் அரசு தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று அந்த மாணவர்களின் கூடுதல் விவரங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை – பிப்ரவரி 15 இல் துவக்கம்!!

மேலும் பள்ளிகளில் 2019-20 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு பயின்று பள்ளிக்கு சரியாக வராத மாணவர்கள் இந்த வருடம் பயின்றால் அவர்களது விவரங்களை EMIS எண்ணை பயன்படுத்தி சேர்க்க முடியவில்லை என தெரியப்படுத்தி அவர்களின் விவரங்களை 2020-21 ஆம் கல்வியாண்டில் சேர்க்க இந்த அறிவிப்புடன் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் வருகிற 11.02.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!