10 & 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் – அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!!

0
10 & 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!!
10 & 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!!
10 & 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் – அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. தற்போது 12 ஆம் வகுப்பை போல் 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு மாணவர்களின் பட்டியல்:

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் அதற்கான பணியை தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் பட்டியல் அடிப்படையில் தயாரிக்கும் பணியை தொடங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டார். இதேபோல இன்று 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை அலுவலருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 220 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – TRB புது பட்டியல் வெளியீடு!!

அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்கள், “10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், ஜாதி, மதம், மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், மாற்றுத்திறனாளி வகை, மொபைல் போன் எண், பாட தொகுப்பு, பயிற்று மொழி மற்றும் மாணவரின் முகவரி என, 12 வகையான தகவல்கள் அடங்கிய தொகுப்பினை தயாரிக்க வேண்டும்.

10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறைகளில் மாற்றம் வேண்டும் – கல்வியாளர்கள் கருத்து!!

இந்த விவரங்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து மாவட்ட தலைமை ஆசிரியர்களும், கல்வி மேலாண்மை இணையதளமான ‘எமிஸ்’ இணையத்தளத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட username மற்றும் password கொண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாணவர்களின் செல்போன் எண் அளிப்பது கட்டாயமாகும். அதில் தான் தேர்வுகள் குறித்த விவரங்கள் அளிக்கப்படும். அரசு தேர்வு துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!