தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

0
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ! – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வராததால் தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் பணி தற்போது சென்னையை தவிர பிற பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. 10 வகுப்பு பொது தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிட தக்கது.

தேர்வு முடிவுகள் எப்போது ?

12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்திய பின்னர், 11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும். 15 நாட்களுக்குள் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்படும். மேலும் . தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான குழு முடிவு செய்யும், பள்ளி வேலை நாட்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்றும் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!