தமிழகத்தில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் 9,10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது.
TN Job “FB
Group” Join Now
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் மட்டும் தான் ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். மாணவர்களுக்கு 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் அவர்களுக்கு கற்பித்தல் அறிவு முக்கியமாக உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ‘ஆல் பாஸ்’ ஏன்? முதல்வர் விளக்கம்!!
ஏற்கனேவே வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கு கட்டாயம் மாணவர்கள் வர வேண்டும் என தெரிவித்த நிலையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Download=> Mobile APP Download செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
6th 7th 8th kum school open pannunga antha kulanthaikalukun kattral arivu vendum thane