தமிழகத்தில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – பெற்றோர்கள் கோரிக்கை!!

2
தமிழகத்தில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை - பெற்றோர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை - பெற்றோர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – பெற்றோர்கள் கோரிக்கை!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடங்களை நடத்தி முடித்து விடுமுறையை விரைந்து அறிவிக்க கோரப்பட்டு உள்ளது.

விடுமுறை கோரிக்கை:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து 11 மாதங்களுக்கு பின்னர் கடந்த ஜனவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 10, 12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கிய நிலையில், அதற்கடுத்து 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கப்பட்டது. பிற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி, ஆந்திரா உட்பட சில மாநிலங்களில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் இதுவரை அரசு இது தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

TN Job “FB  Group” Join Now

கடந்த சில நாட்களாக பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிகளில் அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாவட்டந்தோறும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் பள்ளிகளில் கொரோனா பரவல் சற்று தீவிரமடைந்து உள்ளது.

9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் இறுதிக்குள் தேர்வு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

இதனால் மாணவர்களின் நலன் கருதி விரைந்து விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாகவும், பின்னர் பொதுத்தேர்வு எழுத உள்ள 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை விரைந்து நடத்தி முடித்து விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 1 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

2 COMMENTS

  1. Plz atha first seiga +2 students ku schl vekkarathu romba kastama visiyam and 10th and 11th ku all pass but+2 ku mattum ilaya enna ethu… 😒😒apo Nanga mattum pavam ilaya ethu en kalvithuraike theriya Matikethu….
    Plz it’s +2 student humble request exam kojam thalli veiga ilati schl leave vituga aptium ilaya kandipa students Corona varum..

  2. Yes, it’s true 😟 12th standard students kku corona varamal irukkatha students layee 12th students kku tha athigama corona🦠😷 affect
    Aagirukku, soo🙏pls 12th kku Leave vidunga , 12th students ellm pavam ipo athigama affect agirukkurathe school students mattumtha athulaum 12th students thaa athigama affect aagirukkanga soo, 12th kku leave vidunga apdi illaina corona affect athigama thaa irukkum…..
    🙏 THANK you 🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!