மாவட்ட பதிவுத்துறையில் உள்ள 1376 காலிப்பணியிடங்கள் – விரைவில் நியமனம்!!

0
மாவட்ட பதிவுத்துறையில் உள்ள 1376 காலிப்பணியிடங்கள் - விரைவில் நியமனம்!!
மாவட்ட பதிவுத்துறையில் உள்ள 1376 காலிப்பணியிடங்கள் - விரைவில் நியமனம்!!
மாவட்ட பதிவுத்துறையில் உள்ள 1376 காலிப்பணியிடங்கள் – விரைவில் நியமனம்!!

தமிழகத்தில் உள்ள பத்திர அலுவலகங்களில் காலியாக உள்ள 1376 முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கி பதிவுத்துறை தலைவர் பொ.சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

பதிவுத்துறை வேலைவாய்ப்புகள்:

தமிழகத்தில் மொத்தம் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. அதில் ஆவண எழுத்தாளர்கள் மற்றும் முத்திரையாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். புதிய ஆவண எழுத்தாளர்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர் நியமிக்கும் ஆணை பல ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால் பத்திர அலுவலகங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் படிப்புகளுக்கு அனுமதி – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் பொ.சங்கர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, “தற்போது தமிழகத்தில் உள்ள 575 பதிவு அலுவலகங்களில் காலியாக உள்ள 1376 பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு அறிவித்த நெறிமுறைகளை பின்பற்றி காலியிடங்களை நிரப்ப மாவட்ட பதிவாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரிகளில் 4775 தற்காலிக ஊழியர்களுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு – உயர்கல்வித்துறை சுற்றறிக்கை!!

புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு பதிவுத்துறை முத்திரை சட்ட விதிகளின்படி கல்வித்தகுதி, முன் அனுபவம், உரிமம் கோரும் பகுதியில் இருப்பவர்கள், உடல் தகுதி, செல்வ நிலை அடிப்படையில் விண்ணப்பங்கள் பெற வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் நேர்முக தேர்வு நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட பதிவாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன”, இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here