தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சியர் உத்தரவு:
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வர இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கருவிழி பதிவின் மூலமாக ரேஷன் வழங்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!
அதில் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், அனைத்து துறை அலுவலர்களுடன் வடகிழக்கு பருவமழை துவங்குவதையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் தொடங்கப்பட வேண்டிய பணிகள் மற்றும் குறித்து பேசினார். அதன் பின் வடகிழக்கு பருவமழையொட்டி முன்னேற்பாட்டு நடவடிக்கையாக அனைத்து நீர் நிலையங்களிலும் கரைகளை பலப்படுத்தி மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைத்து தயார் நிலையில் வைத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.