
நாளை (ஜன 27) உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
தமிழகத்தில் நாளை (ஜன.27) உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
பூமத்தியரேகையை ஓட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற ஜனவரி 27 ஆம் தேதி உருவாக இருக்கிறது. அது அடுத்த மூன்று தினங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். அதனால் 26.01.2023 மற்றும் 27.01.2023 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 28.01.2023 மற்றும் 29.01.2023 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 30.01.2023 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 26.01.2023 முதல் 28.01.2023 தேதி வரை பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் 29.01.2023 மற்றும் 30.01.2023 ஆகிய தேதிகளில் இலங்கையை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மேலே குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.