தனியார் பள்ளி மாணவர்களுக்கும் சைக்கிள், மடிக்கணினி – அரசுக்கு கோரிக்கை!!
தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தனியார் பள்ளி கோரிக்கைகள்:
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தின் முடிவில் பல்வேறு கோரிக்கைகள் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,
TN Job “FB
Group” Join Now
1. தமிழக அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளுக்கான 7.5% இடஒதுக்கீடு வழங்கியது போல குழந்தைகளுக்கான இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி திட்ட மாணவர்களுக்கும், சீர்மிகு பள்ளித்திட்டம் போன்றவற்றில் படித்த மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
2. தனியார் பள்ளி ஆசிரியர்கள் கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
3. கல்வி நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சொத்து வரியில் இருந்து விலக்கு வழங்க வேண்டும்.
காமராஜர் பல்கலை பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு – மார்ச் 24 முதல் தொடக்கம்!!
4. தனியார் நர்சரி பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த அனுமதி வழங்க வேண்டும்.
5. மேலும் தனியார் பள்ளி கட்டணத்தை, பள்ளி கட்டண குழு பள்ளி நிர்வாகத்துடன் கலந்துரையாடி பின்னர் நிர்ணயம் செய்ய வேண்டும் அல்லது அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு எவ்வளவு தொகை செலவிடுகிறதோ அதையே கட்டணமாக வசூலிக்க தனியார் பள்ளிக்கு உரிமை வழங்க வேண்டும்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை – பட்டியல் தயாரிப்பு தீவிரம்!!
6. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து இலவச சலுகைகளும் (சைக்கிள், மடிக்கணினி, காலனி, புத்தகப்பை போன்றவை) தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும்.
8. கொரோனா காலத்தில் பள்ளி வாகனங்களிடம் வசூலிக்கப்படும் சாலை வரி முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசு கட்சியினருக்கு எங்களது சங்கம் ஆதரவாக இருக்கும் இவ்வாறு சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.