தனியாருக்கும் அரசுப்பள்ளிக்கு இணையான சலுகைகள் – கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, அரசு பள்ளிகளுக்கு இணையான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என தனியார் பள்ளிகளின் தாளாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தனியார் பள்ளிகள் கோரிக்கை:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. விலையில்லா சைக்கிள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா புத்தகங்கள் போன்றவை அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளிலும் 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றன. ஆனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அவ்வாறு எந்த சலுகையும் அரசிடம் இருந்து கிடைக்கப்படவில்லை.
TN Job “FB
Group” Join Now
மேலும் கொரோனா காரணமாக தனியார் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளதால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால் மாணவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் நேற்று நடைபெற்ற தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் சங்க மாநில செயலாளர் என்.எஸ். குடியரசு கூறுகையில், “கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2000 நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தோம்.
தமிழக அரசு பொறியியல் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை – கொரோனா எதிரொலி!!
ஆனால் அதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் யாவும் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே தனியார் பள்ளிகளுக்கும் அவ்வாறு சலுகை வழங்கினால் நாங்களும் ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இணையான சம்பளம் வழங்குவோம். இந்த கோரிக்கைகளுக்கு அரசு இன்னும் செவி சாய்க்காமல் இருந்தால் தற்போது நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.