தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 வரை காலஅவகாசம்!

0
தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - ஆகஸ்ட் 3 வரை காலஅவகாசம்!
தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - ஆகஸ்ட் 3 வரை காலஅவகாசம்!
தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 வரை காலஅவகாசம்!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்த கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ஆரம்ப நிலை வகுப்புகளில், 25% இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைகள் தற்போது துவங்க உள்ளது. இந்நிலையில் புதிய மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன் உதவி – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதன் படி புதிய மாணவர் சேர்க்கைகளுக்காக ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 107 மெட்ரிக் பள்ளிகள்,1 சுயநிதிப்பள்ளி மற்றும் 89 தொடக்க மற்றும் மழலையர் பள்ளிகளில் உள்ள காலியிடங்கள் குறித்த விவரங்களை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 3296 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மாத ஊதியம் – அரசாணை வெளியீடு!

இந்த பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்து கொள்ள காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் 14 ஒன்றியங்களில் செயல்படும் வட்டாரக்கல்வி அலுவலகங்களிலும் புதிய மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை செலுத்தலாம். இவற்றில் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனையாக மாணவர்களின் இருப்பிடம், அப்பள்ளியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்.

இன்று முதல் தியேட்டர்கள், ஜிம்கள் திறப்பு – ஆந்திராவில் ஊரடங்கு தளர்வுகள் அமல்!

மேலும் இப்பள்ளிகளில் விண்ணப்பிப்பதற்கு மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், மருத்துவமனை பிறப்பு பதிவு, அங்கன்வாடி பதிவேடு நகல், வயது குறித்த தகவலுக்காக எழுத்து மூலம் அளிக்கப்பட்ட உறுதிமொழி, பெற்றோர் மற்றும் குழந்தையின் ஆதார் அட்டை, குழந்தையின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here