பொங்கல் பரிசுத்தொகை ரூ.2500 – எந்த ரேஷன் கடையிலும் பெற முடியுமா??
ரேஷன் அட்டைதாரர்கள் எந்த கடையிலும் பொங்கல் பரிசுத்தொகையை பெற முடியுமா?? என்பது குறித்து உணவுத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
தமிழக அரசு வருடம் தோறும் தமிழர்கள் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும். அந்த பரிசுத்தொகுப்பில் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்கும். கடந்த வருடம் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் மக்களுக்கு ரூ.1,000 வழங்கியது தமிழக அரசு.
பரிசுத்தொகை:
இந்நிலையில் இந்த வருடம் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் சரியான பொருளாதார நிலையில் இல்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களுக்கு இந்த வருட பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2500 வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.
தமிழக மக்கள் தங்கள் ரேஷன் அட்டையை வைத்து மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற “ஒரே நாடு ஒரே கார்டு” திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி தமிழக மக்கள் தங்கள் ரேஷன் அட்டையின் மூலமாக மாநிலத்தில் எந்த பகுதியில் இருந்தாலும் பொருட்களை வாங்க முடியும். இத்திட்டம் கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது.
யோகா & இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி – முக்கிய அறிவிப்பு!!
இந்நிலையில் இந்த வருட பொங்கல் பரிசுத்தொகையையும் இந்த திட்டத்தில் மக்கள் வாங்கலாமா?? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து உணவுத்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டத்தின் கீழ் கடைகளுக்கு ஏற்கனவே வழங்கும் பொருட்களை விட 5% பொருட்கள் அதிகமாக வழங்கப்படும்.
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு – புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர் வழக்கு தள்ளுபடி!!
கூடுதல் பொருட்களை வேறு கடைகளை சேர்ந்த மக்கள் வாங்கவில்லை என்றாலும் கூட அவை கடையிலேயே இருக்கும். ஆனால் ரொக்க பணத்தை கையாளுவது சிரமமான காரியம். கூடுதலாக பணம் அனுப்பினால் தொலைந்தது விட்டதாக கூறவும் வாய்ப்புள்ளது. அதை தடுக்கும் வகையில் கார்டு தாரர்கள் தங்களின் முகவரிக்கு ஒதுக்கிய கடையில் தான் ரூ.2,500 பொங்கல் பரிசுத்தொகையை வாங்க முடியும்” என்று கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்