ஜனவரி 31 போலியோ சொட்டு மருந்து முகாம்- தமிழக அரசு அறிவிப்பு!!

0
ஜனவரி 31 போலியோ சொட்டு மருந்து முகாம் - தமிழக அரசு அறிவிப்பு!!
ஜனவரி 31 போலியோ சொட்டு மருந்து முகாம் - தமிழக அரசு அறிவிப்பு!!
ஜனவரி 31 போலியோ சொட்டு மருந்து முகாம் – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் வருகிற 31 ஆம் தேதி 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ மருந்து கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து:

இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிக்க அரசு சார்பில் வருடத்திற்கு 2 தவணையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி போலியோ வழங்க திட்டமிடப்பட்ட நிலையில் கொரோனா தடுப்பூசி பணி தொடக்கம் காரணமாக அந்த அறிவிப்பினை ஒத்திவைத்து தற்போது வருகிற 31 ஆம் தேதி தமிழகத்தில் 43,051 மையங்களில் போலியோ மருந்து வழங்கப்பட உள்ளது.

10 & 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் – அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!!

இந்த பணிக்காக 2 லட்சத்துக்கு மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 31 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மேலும் பயணத்தில் உள்ள குழந்தைகளுக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 220 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – TRB புது பட்டியல் வெளியீடு!!

பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வரும்போது கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் அழைத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது, கூட்ட நெரிசலை தடுக்கவும் அரசு பல ஏற்பாடுகள் செய்துள்ளது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here