தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு – இன்று தொடக்கம்!!

0
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு - இன்று தொடக்கம்!!
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு - இன்று தொடக்கம்!!
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு – இன்று தொடக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி இன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கி உள்ளது. இதனை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் கொண்டு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

செய்முறை தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் எடுக்கப்படுகிறது. பள்ளிகளில் 9 முதல் 11ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனை ஒத்திவைக்க கோரி பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக தலைமை செயலாளர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கல் – மத்திய அமைச்சர் அதிகாரப்பூர்வ விளக்கம்!!

இந்நிலையில் இன்று முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கி உள்ளன. சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஏற்கனவே மே 3ம் தேதி திட்டமிடப்பட்டு இருந்த மொழிப்பாட தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டு மே 31 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

TN Job “FB  Group” Join Now

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தேர்வினை கண்காணிக்க உயர் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுக்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. நான்கு குலுக்காளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி கொரோனா அறிகுறி, நோய்த்தொற்று உள்ள மாணவர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!