தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை – அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்!!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை - அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை - அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை – அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில், புதிய அட்டவணை குறித்த விபரங்கள் தொடர்பான தகவல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:

தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் தொடங்கவிருந்த பொதுத்தேர்வுகளும் மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், ஊழியர்களுக்கான அகவிலைப்படி – ஜூலை 1 முதல் சம்பள மாற்றம்!!

அதுமட்டுமின்றி நாளை (ஏப்ரல் 20) முதல் மாநிலம் முழுவதும் இரவு 10 மணிமுதல் காலை 4 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. மேலும் இனிவரும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மத்திய கல்வி அமைச்சகத்தால் ஒத்திவைக்கப்பட்ட பொழுது ஜூன் 1ம் தேதி உள்ள கொரோனா நிலவரத்தை பொறுத்து தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் தமிழகத்தில் தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தற்போது இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் என தீர்மானிக்கப்பட்ட 15 நாட்களுக்கு முன்னதாகவே அதற்கான தேர்வு அட்டவணை குறித்த விபரங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல்கள் இருக்காது. ஏற்கனவே செய்முறை தேர்வுகளை எழுதி முடித்துள்ள மாணவர்களுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here