தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியதரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17ல் இருந்து 28 சதவீதமாக உயர்த்தியது, அதே போல ஓய்வூதியம் 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதரர்களுக்கு அதே அளவு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. ஆனால் இந்த உயர்வு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்திய அணிக்கு சிக்கல் – அரையிறுதி போட்டியில் வெற்றி யாருக்கு?
இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நல சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு ஓய்வூதியதரர்களுக்கு மறுத்தது பாரபட்சம். அதனால் ஓய்வூதியதாரர்களுக்கு 2022 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வை கணக்கிட்டு 4 மாதங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.