தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி தொலைக்காட்சி பாட நேரம்!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வி தொலைக்காட்சி
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வி தொலைக்காட்சி
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி தொலைக்காட்சி பாட நேரம்!!

தமிழக பள்ளி மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் வகுப்பு வாரியாக பாடங்களுக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தொலைக்காட்சி:

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக தான் ஒளிபரப்பப்பட்டது. வகுப்புகள் வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டது. கடந்த கல்வி ஆண்டு முழுவதும் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக தான் பாடங்களை கற்றனர்.

தமிழகத்தில் மே 11 முதல் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் – தொழில்துறை அமைச்சர் பேட்டி!!

மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாட வாரியான பயிற்சி புத்தகங்கள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. பயிற்சி புத்தகத்தில் உள்ள பாடங்களை வகுப்பு மற்றும் பாட வாரியாக தயாரித்து வீடியோவாக அனுப்ப அரசு மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அவை கடந்த 22ம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மே 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை வகுப்பு வாரியாக புதிய அட்டவணை படி பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு இந்த புதிய அட்டவணை அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாடங்களில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் மாணவர்களிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!