தமிழகத்தில் வெங்காயம் விலை கிலோ ரூ.75க்கு விற்பனை – அதிர்ச்சியில் மக்கள்!
தமிழகத்தில் கடந்த சில வாரமாக வெங்காயம் விலையானது உச்சத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (நவ. 17) வெங்காயம் விலை ரூ. 75க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் விலை
தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் காய்கறி வரத்து குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. அதில் கடந்த மாதம் மகாராஷ்டிராவில் நாசிக் பகுதிகளில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைவாக இருந்தது. அதனால் விலையானது கடுமையாக அதிகரித்து ஒரு கிலோ வெங்காயம் ரூ. 90வரை விற்பனை செய்யப்பட்டது.
சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம் – தினசரி அப்டேட்!
அதன் பின் வரத்து அதிகரித்ததால் விலை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் மீண்டும் வெங்காய வரத்து கோயம்பேடு சந்தையில் குறைத்ததை அடுத்து வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கிலோ வெங்காயம் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் வெங்காயம் கிலோ ரூ. 70 முதல் ரூ. 75 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சின்ன வெங்காயம் விலை மொத்த விற்பனையில் ரூ.90க்கும், சில்லறை விற்பனையில் ரூ.110 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.