தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? தீவிர ஆலோசனை!

0
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மீண்டும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு விரைவில் அமல்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இரவு நேர ஊரடங்கு:

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் இதில் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக வழங்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1.15 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இன்று முதல் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசுகள் அறிவிப்பு!!

இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் தினசரி 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையில் நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள், 11 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

TN Job “FB  Group” Join Now

இதில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இன்று மத்திய அமைச்சரவை கூடி இது தொடர்பாக விவாதிக்க உள்ளது. இதில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து இதில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மற்றும் போக்குவரத்து சேவைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 32% உயர்வு – அரசு ஆலோசனை!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளில் விதிக்கப்பட உள்ள கட்டுப்பாடுகள் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!