தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பதிவு செய்தோர் கவனத்திற்கு – அரசு உத்தரவு!

4
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பதிவு செய்தோர் கவனத்திற்கு - அரசு உத்தரவு!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பதிவு செய்தோர் கவனத்திற்கு - அரசு உத்தரவு!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பதிவு செய்தோர் கவனத்திற்கு – அரசு உத்தரவு!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்குவது தொடர்பாக உணவு வழங்கல் துறைக்கு மாநில உணவு ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

புதிய ரேஷன் கார்டுகள்:

தமிழகத்தில் பொதுமக்கள் அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை அரசின் குறைந்த விலைக்கு பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் அருகிலுள்ள நியாயவிலை கடைகளில் பொருட்களை பெறலாம். மாநில அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 2.13 கோடி ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. மாநிலம் தோறும் 34,773 நியாய விலைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மாநிலம் முழுவதும் 39 மாவட்டங்களின் 314 வட்டங்களிலும் ரேஷன் அட்டைகளின் பயன்பாடு உள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.122 சரிவு – முழு விவரம் இதோ!!

அரசின் நலத்திட்டங்கள், சலுகைகள், நிவாரண நிதிகள் போன்றவற்றை பெறுவதற்கு ரேஷன் அட்டை அவசியமாகும். தற்போது கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 இரு தவணைகளாக வழங்கப்பட உள்ளது. மேலும் புதிய ரேஷன் கார்டுகளுக்காக மாநிலம் முழுவதும் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. விண்ணப்பித்தவர்கள் புதிய ரேஷன் கார்டுகள் வரும் என்ற ஆவலுடன் உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு கூட இதுவரை ரேஷன் கார்டுகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அரசின் சலுகைகளை பெற முடியாமல் உள்ளோம் என மக்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வாசுகி தலைமையிலான மாநில உணவு ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. இதையடுத்து உணவு வழங்கல் துறைக்கு மாநில உணவு ஆணையம் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து தகுதியான நபர்களுக்கு விரைவாக புதிய ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. ஐயா… வணக்கம்..

    ஸ்மார்ட் ரேஷன் கார்டு…குடுத்து பல வருடங்கள் முடிந்தது…அதில்…அந்த குடும்பத்தில் யார்ரே.ஒருவர் இறந்ததால்…உடனே…இறந்த சான்றிதழ் வாங்க…தகவல் சொல்லு மக்கள்……

    யென்…ரேஷன் கார்டியில் இருந்து…பெயர் நீக்கம் செய்யமால்…இருப்பது…

    இறந்த பிறகு… பல வருடங்களாக ..உணவு பொருட்களை வாங்கி கொண்டு தான் இருக்கிறேம்..

    .தமிழ் நாடு அரசுக்கு… சொல்லுவது

    தற்போது புதிய மக்களுக்கு…யென்…புதிய ..ரேஷன் கார்டியில் வழங்க முடியவில்லை

    தமிழ்நாடு அரசு..இதை பற்றி யோசிக்க வேண்டும்..

    யென் உணவு பொருட்கள் பற்ற க்குறை வருதுன்னு..

  2. உயர்திரு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்,

    எனது பெயர்: சொ.சிவ சுப்ரமணியன். நான் எனது மனைவி,மகள் மற்றும் மகன் நால்வரும் கடந்த கொரோனா முதல் அலைக்குமுன் நாகர்கோவிலில் இருந்து திண்டுக்கல் நகருக்கு குடும்பத்துடன் பிழைப்பு தேடி வந்தோம். வந்த 10 தினங்களில் கொரோனவால் லாக்டவுன் வந்தது. லாக்டவுன் முடிந்ததும் எனக்கு சாலை விபத்தில் கால் விரல் துண்டாகி விட்டது. எனது மனைவிக்கும் உடல் நிலை சரியில்லாமல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இந்த நிலையில் கஷ்டபட்டு ஆதார் முகவரி மாற்றம் செய்து விட்டேன்.பிறகு ரேஷன் கார்டு முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பித்த நிலையில் தேர்தல் தேதி அறிவித்து விட்டமையால் இன்னும் குடும்ப அட்டை கிடைக்கவில்லை. தற்சமயம் நாகர்கோவிலிலும் குடும்ப அட்டை எண் இல்லை. கடந்த ஓராண்டுக்கும் மேல் அரசாங்கத்தால் கிடைக்க வேண்டிய எந்த பயனும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனது வயது 59.ஒரு கண் பார்வை கிடையாது.காலிலும் இன்னொரு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன். என்னால் அதிகம் அலைய முடியவில்லை.எனக்கு குடும்ப அட்டை மற்றும் நிவாரண நிதி அனைத்தும் கிடைக்க வழி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    எனது குடும்ப அட்டை,ஆதார் கார்டு அனைத்தும் இதில் இணைத்துள்ளேன்..

    எனது தொலைபேசி எண் 6385771370
    குடும்ப அட்டை எண் : 97A0423629
    மின்னணு அட்டை எண்: 333243413644
    ஆதார் எண் : 6309 2948 7222

    நன்றி

  3. இதே போல் பல கேசுகள் உள்ளன. பொங்கல், Corona சமயங்களில் முகவரி மாற்றம் அங்கீகரிக்கப் படுவது இல்லை. கேட்டால், கார்டு மாற்றும் சமயத்தில் பொருட்களையும், பண உதவிகளையும் புது ரேஷன் கடைக்கு அனுப்ப முடியாது எனச் சொல்லி அங்கீகரிக்கப்படாத நிலை உள்ளது. அங்கீகாரம் கொடுத்து விட்டால் இம்மாதம் இல்லாவிட்டால் அடுத்த மாதத்தில் இருந்தாவது நிவாரண உதவிகளை மக்கள் பெற ஏதுவாகும். அரசு இக்குறையை போக்கி மக்களுக்கு Corona சமயத்தில் உதவிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்

  4. Iyya, our sugar card we saw in youtube how change in rice card there was option ‘No Commodity’
    accidentally we pressed now we don’t have any ration items.
    Pls your good office to reinstate to sugar card or change to rice card. We are retired persons this essentials items will benefit us.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!