தமிழகத்தில் புதிதாக 660 செவிலியர்கள் பணி நியமனம் – மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!!

1
தமிழகத்தில் புதிதாக 660 செவிலியர்கள் பணி நியமனம் - மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் புதிதாக 660 செவிலியர்கள் பணி நியமனம் - மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் புதிதாக 660 செவிலியர்கள் பணி நியமனம் – மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!!

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய 660 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவிலியர்கள் நியமனம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் பரவி வருகிறது. அதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்காக சிறப்பு பிரிவுகள் தொடங்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

அதில் டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக பணியாளர்கள் என பலர் ஒப்பந்தம் அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டனர். மேலும் நோய்யாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல 108 ஆம்புலன்ஸ் சேவைகளும் புதிதாக தொடங்கப்பட்டன. அதில் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டனர். மேலும் ஓய்வு பெற உள்ள அரசு ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் – பிரதமர் மோடி ஆலோசனை!!

இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 3304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் போதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 660 புதிய செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here