தமிழகத்தின் புதிய சட்ட ஒழுங்கு டிஜிபி ஆக சைலேந்திரபாபு – இன்று பதவியேற்பு!

0
தமிழகத்தின் புதிய சட்ட ஒழுங்கு டிஜிபி ஆக சைலேந்திரபாபு - இன்று பதவியேற்பு!
தமிழகத்தின் புதிய சட்ட ஒழுங்கு டிஜிபி ஆக சைலேந்திரபாபு - இன்று பதவியேற்பு!
தமிழகத்தின் புதிய சட்ட ஒழுங்கு டிஜிபி ஆக சைலேந்திரபாபு – இன்று பதவியேற்பு!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு டிஜிபியாக பதவி வகித்த திரிபாதி அவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் காரணத்தால் புதிய சட்ட ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

டிஜிபி:

தமிழகத்தின் சட்ட ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் திரிபாரதி அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். இவரது பணிக்காலம் 2 வருடங்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது பதவிக்காலம் தற்போது முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக புதிய சட்ட ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் கடந்த ஜூன் 28ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள சைலேந்திரபாபு (ரயில்வே), கரன்சின்ஹா (தீயணைப்புத்துறை), சஞ்சய் குமார் (எல்லை பாதுகாப்பு படை) ஆகியோரது பெயர்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.

மத்திய அரசு சார்பில் ரூ.4000 கூடுதல் உதவித்தொகை – நாளை கடைசி நாள்!

இந்த பட்டியலை பரிசீலனை செய்த தமிழக அரசு சட்ட ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்களை நேற்று (ஜூன் 29) மாலை நியமனம் செய்து உத்தரவிட்டது. இவர் பதவி ஏற்ற நாள் முதல் அடுத்த 2 வருடங்களுக்கு இந்த பதவியில் நீடிப்பார். இவரின் பதவிக்காலம் 2022 ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வரும் பட்சத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அவர் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. சைலேந்திரபாபு, இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் எம்எஸ்சி (அக்ரி), எம்ஏ, பிஎச்டி முடித்துள்ளார்.

தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

கடந்த 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியில் சேர்ந்தார். இவர் தனது பணி காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு அனைத்து வகை பாராட்டுகளையும் பெற்றார். மேலும் இவர் வீரப்பன் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து பதவி உயர்வு பெற்று, விழுப்புரம் டிஐஜியாகவும், வடசென்னை, தென் சென்னை இணை கமிஷனர், திருச்சி சரக டிஐஜியாக பணியாற்றினார். பின்னர் 2006ம் ஆண்டு புகளூர் காகித ஆலை டிஐஜியாகவும், ஐஜியாகவும் பணியாற்றியவர் மீண்டும் ஈரோடு அதிரடிப்படை, கோவை கமிஷனர், வடக்கு மண்டல ஐஜியாக பணியாற்றினார்.

ஜூலை 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

பின் கடலோர பாதுகாப்பு குழுமம் ஏடிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மீண்டும் கடலோர பாதுகாப்பு குழுமம் ஏடிஜிபி, சிறைத்துறை,ரயில்வே போலீசிலும் பணியாற்றியவர், டிஜிபி பதவி உயர்வு பெற்று ரயில்வே, சிவில் சப்ளை, தீயணைப்பு துறைகளையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய டிஜிபி சைலேந்திரபாபு, இன்று (ஜூன் 30) பதவி ஏற்கிறார். அவரிடம் பொறுப்புக்களை திரிபாதி அவர்கள் ஒப்படைக்கிறார். இன்று மாலை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் திரிபாதிக்கு காவலர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. அதில் புதிய டிஜிபியும், ஓய்வு பெற்ற டிஜிபியும் பங்கேற்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!