தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல் - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல் - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

தமிழகத்தில் நாளை (மே 6) காலை 4 மணி முதல் மே 20ம் தேதி காலை 4 மணி வரை புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. இதனை பொதுமக்கள் முறையாக பின்பற்றி கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முழு ஒத்துழைப்பை தருமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

  • அனைத்து அரசு அலுவலகங்களும்‌, தனியார்‌ அலுவலகங்களும்‌ அதிகபட்சம்‌ 50 விழுக்காடு பணியாளர்களுடன்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது.
  • பயணியர் இரயில்‌, மெட்ரோ இரயில்‌, தனியார்‌ பேருந்துகள்‌, அரசு பேருந்துகள்‌ மற்றும்‌ வாடகை டாக்ஸி ஆகியவற்றில்‌ 50 விழுக்காடு இருக்கைகளில்‌ மட்டும்‌ பொது மக்கள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
  • 3000 சதுர அடி மற்றும்‌ அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள்‌ இயங்க 26.4.2021 முதல்‌ ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வணிக வளாகங்களில்‌ இயங்கும்‌ பலசரக்கு கடைகள்‌ மற்றும்‌ காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள்‌ மற்றும்‌ காய்கறிகள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ மட்டும்‌ குளிர்சாதன வசதி இன்றி நண்பகல்‌ 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
  • இவற்றில்‌, ஒரே சமயத்தில்‌ 50 சதவிகிதம்‌ வாடிக்கையாளர்கள்‌ மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்‌. மேற்கூறிய மளிகை, பலசரக்கு மற்றும்‌ காய்கறிக்‌ கடைகள்‌ தவிர, இதர கடைகள்‌ அனைத்தும்‌ திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள்‌, பால்‌ விநியோகம்‌ போன்ற அத்தியாவசியப்‌ பணிகள்‌ வழக்கம்‌ போல எந்தத்‌ தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

  • அனைத்து உணவகங்களிலும்‌ பார்சல்‌ சேவை வழங்க மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌. தேநீர்‌ கடைகள்‌ நண்பகல்‌ 12 மணி வரை மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. உணவகங்கள்‌ மற்றும்‌ தேநீர்கடைகளில்‌ உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில்‌ தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள்‌ தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்‌. உணவுக்‌ கூடங்களில்‌ அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
  • உள்‌ அரங்கங்கள்‌ மற்றும்‌ திறந்த வெளியில்‌, சமுதாயம்‌, அரசியல்‌, விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள்‌ மற்றும்‌ இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது. திரையரங்குகள்‌ செயல்படாது.

மதுரை காமராஜர் பல்கலை பருவத்தேர்வுகள் – இன்று முதல் தொடக்கம்!!

  • ஏற்கனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில்‌, 25 நபர்களுக்கு மிகாமல்‌ கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்‌, தற்போது இறுதி ஊர்வலங்கள்‌ மற்றும்‌ அதைச்‌ சார்ந்த சடங்குகளில்‌ 20 நபர்களுக்கு மேல்‌ அனுமதி இல்லை.
  • ஏற்கனவே, மாநகராட்சி மற்றும்‌ நகராட்சி பகுதிகளில்‌ அழகு நிலையங்கள்‌ இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, தற்போது ஊரகப்‌ பகுதிகளில்‌ உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும்‌, அழகு நிலையங்கள்‌, இயங்க தடை விதிக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!