தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு உத்தரவு!!

0
தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - அரசு உத்தரவு!!
தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - அரசு உத்தரவு!!
தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு உத்தரவு!!

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவானது ஏப்ரல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. முழு பொது முடக்கத்தின் விளைவாக நோய் பரவல் குறைந்திருந்த நிலையில், அரசு சார்பில் வழங்கப்பட்ட அதிகப்படியான தளர்வுகள் காரணமாக தற்போது மீண்டும் தொற்று வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில் தமிழக அரசு இன்று (மார்ச் 31) நள்ளிரவுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவினை மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து உள்ளது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மாநிலம் முழுவதும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை பரவல் அதிகரித்து உள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே உள்ள தளர்வுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் அரசின் உத்தரவில், சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட தடை தொடரும் எனவும், பொது பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா பரவலை தடுக்க வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணிகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!