தமிழக பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை – இன்னும் 2 நாட்களில் தொடக்கம்! எதிர்பார்ப்பில் மக்கள்!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இன்னும் 2 நாட்களில் வழங்கப்பட இருக்கும் நிலையில், விண்ணப்பித்து காத்திருக்கும் பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உரிமைத்தொகை:
தமிழகத்தில் மக்கள் பலர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த திட்டம் இன்னும் 2 நாட்களில் அதாவது செப். 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. அரசு இந்த திட்டத்திற்கான இறுதிக்கட்ட பணிகளை முடித்து பட்டியல் தயார் செய்துள்ளது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 தொகை வழங்கப்பட இருக்கிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – பழைய கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு!
இந்த திட்டம் மூலம் 1 கோடியே 6 லட்சம் பெண்கள் பயனடைய இருப்பதாக அரசு தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இன்னும் 2 நாளில் யாருக்கெல்லாம் பணம் வரும் என்பதை தெரிந்துக் கொள்ள மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.