‘கற்போம் எழுதுவோம்’ திட்ட கல்வி தொலைக்காட்சி பாடங்கள் – இன்று முதல் தொடக்கம்!!

0
'கற்போம் எழுதுவோம்' திட்ட கல்வி தொலைக்காட்சி பாடங்கள் - இன்று முதல் தொடக்கம்!!
'கற்போம் எழுதுவோம்' திட்ட கல்வி தொலைக்காட்சி பாடங்கள் - இன்று முதல் தொடக்கம்!!
‘கற்போம் எழுதுவோம்’ திட்ட கல்வி தொலைக்காட்சி பாடங்கள் – இன்று முதல் தொடக்கம்!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தில் படிப்பவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கற்போம் எழுதுவோம்’ திட்டம்:

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை. தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத 3.10 லட்சம் பேர் உள்ளதால், அதனை சரி செய்யும் நோக்கில் ‘கற்போம் எழுதுவோம்’ இயக்கம் வாயிலாக எழுத்தறிவு வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அதற்காக அரசு, அரசு உதவி பெறும், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி வளாகங்களில், 15 ஆயிரத்து 823 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தன்னார்வ ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு திட்டம் – நீதிமன்றத்தில் வழக்கு!!

இதன் மூலமாக பாடங்கள் தினமும் மாலை 7 மணி முதல் அரை மணி நேரம் ஒளிபரப்பப்படும். இந்த திட்டத்தில் முதியோர்கள் அதிகமாக படித்து வருவதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் பயின்று வருபவர்கள் இந்த நிகழ்ச்சிகளை பார்த்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here