கல்விக் கடனில் தமிழகம், கேரளா முன்னிலை – மத்திய அமைச்சர் விளக்கம்

1
கல்விக் கடனில் தமிழகம், கேரளா முன்னிலை - மத்திய அமைச்சர் விளக்கம்
கல்விக் கடனில் தமிழகம், கேரளா முன்னிலை - மத்திய அமைச்சர் விளக்கம்
கல்விக் கடனில் தமிழகம், கேரளா முன்னிலை – மத்திய அமைச்சர் விளக்கம் 

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக்கடன் பெற்ற மாணவர்களின் விகிதத்தில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

கல்விக்கடன்:

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் கல்விக்கட்டணத்தை செலுத்துவதற்காக கல்விக்கடனை வழங்குகிறது. அந்த கல்விக்கடனை மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த ஒரு வருடத்தில் இருந்து செலுத்த வேண்டும்.

12ம் வகுப்பு மாதிரி தேர்வுகள் தொடக்கம் – குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம்!!

மக்களவை உறுப்பினரின் கேள்வி:

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் கல்விக்கடன் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் விவரம், கடனை வசூலிக்க தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகிறதா போன்ற கேள்விகளை சிவகங்கை மாவட்ட மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் மக்களவையில் கேட்டிருந்தார்.

மத்திய நிதியமைச்சரின் பதில்:

மக்களவையில் எழுந்துள்ள கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று பதில் அளித்துள்ளார். அதில், 2020ம் ஆண்டு டிசம்பர் வரை 24,84,397 பேருக்கு ரூ. 89,883.57 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 6,97,066 மாணவர்கள் ரூ. 17,193.58 கோடி கல்விக்கடன் பெற்றுள்ளனர். அதில், 1,68,41. மாணவர்களின் ரூ. 3,490 கோடி வாரக்கடனாக உள்ளது. நாட்டிலேயே தமிழகம் தான் அதிக கல்விக்கடன் பெற்றவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

பள்ளி மாணவிகளின் பெற்றோருக்கும் கொரோனா – தஞ்சாவூரில் பதற்றம் !

தமிழகத்தை அடுத்து கேரளா மாநிலம் தான் அதிக கல்விக்கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாட்டிலேயே மிகவும் குறைவான கல்விக்கடனை பெற்ற மாநிலங்களின் பட்டியலில் பிஹார் முதல் இடத்தில் உள்ளது. அதே சமயத்தில் வராக்கடன் விகிதத்திலும் பிஹார் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாராக்கடனை வசூலிக்க தனியார் நிறுவனங்கள் நியமிக்கப்பட்டது. வங்கிகள் சட்ட விரோதமான முறைகளில் கடனை வசூலிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு ஆறு மாத காலஅவகாசம் ரிசர்வ் வங்கி வழங்கியது. அதன்படி, அரசு வட்டி விகிதங்களில் பல்வேறு நிவாரணங்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!