தமிழக அரசு சார்பில் ரூ.3500 உதவித்தொகை, இலவச பேருந்து பயணம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசு சார்பில் ரூ.3500 உதவித்தொகை, இலவச பேருந்து பயணம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு சார்பில் ரூ.3500 உதவித்தொகை, இலவச பேருந்து பயணம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு சார்பில் ரூ.3500 உதவித்தொகை, இலவச பேருந்து பயணம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வழங்கப்படும் தமிழறிஞர் உதவித்தொகைக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழறிஞர் உதவித்தொகை:

தமிழகத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த உதவித்தொகை பெற விரும்புவார்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் இந்த உதவித்தொகையை பெற விரும்புபவர்களுக்கான தகுதி குறித்தும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

அந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது, தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் வயது முதிர்ந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.3,500, மருத்துவப்படி ரூ.500 மற்றும் இலவச பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தமிழறிஞர்கள் 1.1.2021 அன்று 58 வயதை நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் உங்கள் ஆண்டு வருமானம் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும். உதவித்தொகை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பத்தினை தமிழ் வளர்ச்சித்துறையின் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பாங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2021 – கல்வி தகுதி : டிகிரி | தேர்வு கிடையாது

பின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் வருமான சான்றிதழ், தமிழ் பணிகளுக்கான தகுதி நிலை சான்றிதழ் (தமிழறிஞர்கள் இருவரிடமிருந்து பெறப்பட வேண்டும்) ஆகியவற்றை இணைத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தலத்தில் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!