தமிழகத்தில் 3296 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மாத ஊதியம் – அரசாணை வெளியீடு!

1
தமிழகத்தில் 3296 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மாத ஊதியம் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் 3296 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மாத ஊதியம் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் 3296 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மாத ஊதியம் – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 3296 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான ஜூன் மாத ஊதிய கொடுப்பாணை தற்போது பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு:

தமிழகத்தில்‌ அனைவருக்கும்‌ இடைநிலைக்‌ கல்வித்‌ திட்டத்தின் கீழ்‌ 344 ஊராட்சி ஒன்றிய, மாநகராட்‌சி, நகராட்சி, நலத்துறை நடுநிலைப்‌ பள்ளிகளை 6 முதல்‌ 10 வகுப்புகள்‌ கொண்ட அரசு / மாநகராட்‌சி, நகராட்சி நலத்துறை உயர்நிலைப்‌ பள்ளிகளாக 2011-12 ஆம்‌ கல்வியாண்டில்‌ தரம்‌ உயர்த்தியும்‌, அவ்வாறு தரம்‌ உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு ரூ.9300 – 34800 தர ஊதியம்‌ 4600 என்ற ஊதிய விகிதத்தின்‌ பள்ளி ஒன்றுக்கு தலா 6 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடம்‌ வீதம்‌ 2064 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

மேலும்‌ 344 பள்ளிகளுக்கும்‌ (ரூ.5200 – 20200, தர ஊதியம்‌ 2800) என்ற ஊதிய விகிதத்தில்‌ 344 உடற்கல்வி ஆசிரியர்‌ பணியிடங்களும்‌ ஆக மொத்தம்‌ 2408 ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ தற்காலிகமாக தோற்றுவித்தும்‌ புதிதாக தரம்‌ உயரத்தப்படும்‌ 344 உயர்‌நிலைப்‌ பள்ளிகளுக்கும்‌ 344 நடுநிலைப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்‌ பணியிடங்களை உயர்நிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசியர்‌ பணியிடமாக நிலையுயர்த்தி உயர்‌நிலைப்‌ பள்ளிகளுக்கு பயன்படுத்திக்‌ கொள்ள அனுமதித்தும்‌ ஆணைகள்‌ வெளியிடப்பட்டன.

உணவகங்கள் இரவு 10.30 மணி வரை செயல்பட அனுமதி – ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு!

2009-10 ஆம்‌ ஆண்டில்‌ தரமுயர்த்தப்பட்ட 200 அரசு / நகராட்சி / மாநகராட்சி , நலத்துறை உயர்நிலைப்‌ பள்ளிகளுக்கு 200 ஆய்வக உதவியாளர்‌ பணியிடங்களும்‌, மேலே முதலாவதாகப்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, 201412 ஆம்‌ ஆண்டில்‌ தரமுயர்த்தப்பட்ட 344 அரசு / நகராட்சி , மாநகராட்சி 7 நலத்துறை உயர்நிலைப்‌ பள்ளிகளுக்கு 344 ஆய்வக உதவியாளர்‌ பணியிடங்கள்‌ மற்றும்‌ 344 இளநிலை உதவியாளர்‌ பணியிடங்களும்‌ என மொத்தம்‌ 885 பணியிடங்கள்‌ தோற்றுவித்து ஆணைகள்‌ வெளியிடப்பட்டன.

இவ்வாறு 2408 ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ மற்றும்‌ 888 ஆசிரியரல்லாத பணியிடங்கள்‌ என மொத்தம்‌ 3296 பணியிடங்களுக்கு 01.03.2018 முதல்‌ 28.02.2021 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர்‌ நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 01.03.2021 முதல்‌ 29.02.2024 வரை மேலும்‌ மூன்றாண்டுகளுக்கு தொடர்‌ நீட்டிப்பு வழங்க பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ அரசிற்கு கருத்துரு அனுப்பியுள்ளார்‌. மேலும்‌, அந்த பணியிடங்களுக்கு ஜுன்‌ 2021 ஆம்‌ மாதத்திற்கு ஊதியம்‌ பெறத்தக்க வகையில்‌ ஊதியம்‌ வழங்க ஊதிய கொடுப்பாணை வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர்‌ கருத்துரு அனுப்பியுள்ளார்‌.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன் உதவி – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

தொடர்‌ நீட்டிப்பு வழங்கப்பட்ட தற்காலிக பணியிடங்களுக்கு 01.08.2021 முதல்‌ 29.02.2024 வரை மூன்றாண்டிற்கு தொடர்‌ நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ கருத்துரு, அரசின்‌ பரிசீலனையில்‌ உள்ளது. அதன்படி 9296 தற்காலிகப்‌ பணியிடங்களுக்கு ஜுன்‌ 2021ஆம்‌ மாதத்திற்கான ஊதியம்‌ பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான ஜுன்‌ 2021ம்‌ மாதத்திற்கான சம்பளம்‌ மற்றும்‌ இதர படிகளுக்கான ஊதியப்‌ பட்டியல்கள்‌ உரிய அலுவலர்களால்‌ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!