தமிழக அரசின் சூப்பர் திட்டம் – இன்று (அக்.6) முதல் 2 கிலோ, 5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை!

0
தமிழக அரசின் சூப்பர் திட்டம் - இன்று (அக்.6) முதல் 2 கிலோ, 5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை!
தமிழக அரசின் சூப்பர் திட்டம் - இன்று (அக்.6) முதல் 2 கிலோ, 5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை!தமிழக அரசின் சூப்பர் திட்டம் - இன்று (அக்.6) முதல் 2 கிலோ, 5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை!
தமிழக அரசின் சூப்பர் திட்டம் – இன்று (அக்.6) முதல் 2 கிலோ, 5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை!

தமிழகத்தில் சாலை ஓரங்களில் உணவு கடை நடத்தி வரும் தொழிலாளர்களின் நலனிற்காக 2 கிலோ மற்றும் 5 கிலோ கேஸ் சிலிண்டர்கள் இன்று (அக்.06) அறிமுகப்படுத்த இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கேஸ் சிலிண்டர்கள்:

தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்களில் பிழைப்பிற்காக வெளி மாநிலங்களில் இருந்து வந்து தொழிலாளர்கள் பலர் சாலை ஓரங்களில் தள்ளுவண்டி மூலமாக உணவுக் கடைகள் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு சரியான முகவரி இல்லாததால் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதில் சிரமம் ஏற்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் ஐஓசி உள்ளிட்ட பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

அதனால் அவர்களுக்கு சிரமம் ஏற்படுவதால், அவர்களின் நலனிற்காக சமையல் கேஸ் சிலிண்டர்கள் ரேஷன் கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் 2 கிலோ மற்றும் 5 கிலோ கேஸ் சிலிண்டர்கள் இன்று (அக். 6) முதல் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்களின் நலனிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

வீட்டு உரிமையாளர்கள் கவனத்திற்கு – சென்னை மாநகராட்சியின் அதிரடி முடிவு!

Exams Daily Mobile App Download

அதன் படி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும், 2 கிலோ கேஸ் சிலிண்டருக்கு ‘முன்னா’ எனவும், 5 கிலோ கேஸ் சிலிண்டருக்கு ‘சோட்டு’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்களை இன்று (அக். 6) கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிமுகப்படுத்தினார். முதற்கட்டமாக திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் ஐந்து சுயசேவைப் பிரிவுகள் மூலம் இந்த கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேஸ் சிலிண்டர்களை வாங்க இருப்பிடச் சான்று, முன்பணம் என எதுவும் தேவை இல்லை எனவும், எதாவது அடையாள அட்டை இருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!