தமிழகத்தில் அரசு சித்தா கல்லூரிகளில் 2-ம் கட்ட கலந்தாய்வு – பிப்.11ஆம் தேதி முதல் தொடக்கம்!

0
தமிழகத்தில் அரசு சித்தா கல்லூரிகளில் 2-ம் கட்ட கலந்தாய்வு - பிப்.11ஆம் தேதி முதல் தொடக்கம்!
தமிழகத்தில் அரசு சித்தா கல்லூரிகளில் 2-ம் கட்ட கலந்தாய்வு - பிப்.11ஆம் தேதி முதல் தொடக்கம்!
தமிழகத்தில் அரசு சித்தா கல்லூரிகளில் 2-ம் கட்ட கலந்தாய்வு – பிப்.11ஆம் தேதி முதல் தொடக்கம்!

தமிழகத்தில் உள்ள அரசு சித்தா கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 11 ஆம் தேதி நடைபெற இருப்பதாக இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.

கலந்தாய்வு தேதி

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கு அரசு சார்பில் மொத்தம் 5 கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. அதேபோல, 26 தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்கள் உள்ளன. இதில் 1,469 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கும், 521 இடங்கள் நிர்வாகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு ஆகியவை மாநில அரசு சார்பில் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று (பிப்.3) விடுமுறை – வெளியான அறிவிப்பு!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஏற்கனவே முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இன்னும் அரசு கல்லூரிகளில் 61 இடங்கள் காலியாக உள்ளது. மேலும், சுயநிதி கல்லூரிகளில் 350 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 127 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் 503 நிர்வாக ஒதுக்கீடு என மொத்தம் 1,041 இடங்கள் காலியாக உள்ளன. அதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 11 ஆம் தேதி சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது சான்றிதழுடன் வருகிற 15 ஆம் தேதி கலந்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://tnhealth.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!