தமிழக ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை திட்டம் – அரசின் மாஸ்டர் பிளான் என்ன?
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமலில் இருந்து வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த அரசின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டம் முக்கிய அம்சமாகும். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாக இத்திட்டம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் கடந்த மார்ச் மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. அதன்படி செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 உதவித்தொகை திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ( நாளை) பவர் கட்டா? – முக்கிய தகவல்!
அதுவரையிலும் அரசு குறித்த மக்களின் அதிருப்தி நிலை, இதன் பிறகு மாறி உள்ளதாகவும் மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் நல்ல வரவேற்பு பெற்று அரசுக்கு நல்ல பெயர் உள்ளதாகவும் கள விவரங்கள் மூலம் தெரிய வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இதனை வைத்து 2024 மக்களவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் தேர்தல் சமயத்தில் இத்திட்டத்தில் பயனாளர்களின் தகுதிகளில் சில தளர்வுகளை அறிவித்து மேலும் அதிக பயனாளர்களை இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.