தமிழக அரசு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை விரைவில் அறிவிக்க வேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை!!

0
தமிழக அரசு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை விரைவில் அறிவிக்க வேண்டும்
தமிழக அரசு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை விரைவில் அறிவிக்க வேண்டும்
தமிழக அரசு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை விரைவில் அறிவிக்க வேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலம் பாடங்களை மாணவர்கள் கற்று வருகின்றனர். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக மாநில அரசு பாடத்திட்டங்களை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் எந்தெந்த பாடங்கள் குறைக்கப்படும் என்பது குறித்து கல்வித்துறை எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

பாடத்திட்டங்கள் குறைப்பு:

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அடைக்கப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து உரிய சூழ்நிலை இல்லாத காரணத்தால் அது குறித்த முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி – விப்ரோ ஊழியர்களுக்கு ஏப்ரல் 2021 வரை வீட்டில் இருந்தே வேலை!!

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மாணவர்களின் மனநிலைமையை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. அதில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை 50 சதவிகித பாடத்திட்டங்களும் 10ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 35 சதவிகித பாடத்திட்டங்களும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்தெந்த பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து எந்த அறிவிப்பும் பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை.

புதிய சிக்கல் காரணமாக பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,”குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் எவை என்பது குறித்த விவரங்களை வெளியிட்டால் மட்டுமே பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிரமமின்றி தயாராக முடியும். மேலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதுகுறித்த விவரங்களை தற்போது வரை வெளியிடாமல் இருப்பதற்கான காரணம் புரியவில்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறை குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்”, என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!