அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு – தமிழக அரசு அறிவிப்பு!!

0
அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு!!
அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு!!
அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு டோக்கன்களில் அதிமுக கட்சி தலைவர்கள் புகைப்படம் மற்றும் சின்னம் இடம் பெறுவதாக திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு தமிழக அரசு சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இம்முறை ரூ.2500 பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளதால் ஆளுங்கட்சியினர் அதனை ஓட்டாக மாற்ற முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினர் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் பொங்கல் பரிசு டோக்கன்கள் ஆளும்கட்சி தலைவர்கள் புகைப்படம் மற்றும் சின்னத்துடன் வழங்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

பூஜ்ய கல்வியாண்டால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் – ஆசிரியர் சங்கம் தகவல்!!

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் அரசு கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை வழங்கிய அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்சியினரின் ஆர்வ மிகுதியால் இரு இடங்களில் கட்சி தலைவர்களின் படங்களுடன் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. பிற இடங்களில் முறையாகவே வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஜன.,31 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!!

இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் அரசு வழங்கிய டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு உத்தரவினை சுற்றறிக்கையாக அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. அவ்வாறு அறிக்கை அனுப்பவில்லை என்றால் திமுக உயர்நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!