ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்யணம் – தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!!

0
ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்யணம் - தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!!
ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்யணம் - தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!!
ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்யணம் – தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!!

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் / மாணவர்களின் பணியிட நிர்ணயம் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் மு.பழனிச்சாமி அவர்களின் சார்பில் புது சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

பணியிட நிர்ணயம்:

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. அதில் பெறப்பட்ட முடிவுகள் தொகுக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க கால அவகாசம் -எல்.ஐ.சி நிறுவனம் அறிவிப்பு!!!

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியிட நிர்ணயம் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் மு.பழனிச்சாமி புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுப்பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் 31.08.2020 நிலவரப்படி செய்யப்பட்டது.

அரசுப்பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் விரைவில் நியமனம் – விகிதாச்சார கணக்கெடுப்பு!!

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாணவர் சேர்க்கை 17.08.2020 க்கு பின்னர் நடைபெற்றதால், நடப்பு கல்வியாண்டு மட்டும் 30.09.2020 இல் உள்ளபடி ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதில் எவ்வித தவறுகளும் இன்றி இடங்களை பூர்த்தி செய்யுமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் – அண்ணா பல்கலையில் 276 காலியிடங்கள்!!

இதில் மேலும் காலம் தாழ்த்தாமல் சிறப்பாக கவனம் செலுத்தி பணியாளர் நிர்ணய விபரங்களை 07.01.2021ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!