தமிழக அரசு வேலை! இந்த வாரத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் இதோ!

0
தமிழக அரசு வேலை! இந்த வாரத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் இதோ!
தமிழக அரசு வேலை! இந்த வாரத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் இதோ!
தமிழக அரசு வேலை! இந்த வாரத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் இதோ!

அரசு வேலை என்பதை கனவாக வைத்து பலர் முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த வார வேலைவாய்ப்பு செய்திகளின் தொகுப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் வேலைவாய்ப்பு பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

தமிழக அரசு வேலை:

அண்ணா பல்கலைக்கழகம், மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆகிய இடங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிக்கு எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் Degree முடித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு தினசரி ஊதியம் மற்றும் மாத ஊதியம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள முழு விவரங்களையும் படித்து அதன் மூலம் விண்ணப்பித்து, அரசு வேலையை பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழகம்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் Computer Programmer, Professional Assistant-I, Professional Assistant-III, Clerical Assistant, Peon-cum-Line operator /Carpenter / Plumber / Electrician போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இங்கு மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்னும் சில காலம் மட்டுமே உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உடனே விண்ணப்பிக்க….!
மாவட்ட சமூக நல அலுவலகம்:

பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். MA முடித்த விண்ணப்பதாரர்கள் 18-01-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முழு விவரங்களுக்கு…!
திருவண்ணாமலை மாவட்ட அரசு வேலை:

Dental Technician பணியிடங்கள் திருவண்ணாமலை மாவட்ட தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு SSLC தேர்ச்சி உடன் பல் தொழில்நுட்ப படிப்பு (1 அல்லது 2 ஆண்டுகள்) முடித்திருக்க வேண்டும். இதற்கான நேர்காணல் ஆனது ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் அறிய…!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை:

அரசு ராஜாஜி மருத்துவமனையில் Data Entry Operator, Security, பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPHW), Sanitary Worker ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் கூட இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களை அறிய..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!