தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு – அரசின் நடவடிக்கை என்ன?
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழகத்தில் பால் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பால் கொள்முதல் விலை:
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் பால் நிறுவனம் சுற்றுப்புறங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக விவசாயிகள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தற்போது ஆவின் நிறுவனம் கடுமையான நிர்வாக சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆவின் பால் விற்பனை 10 லட்சம் லிட்டருக்கு மேல் அதிகரித்துள்ளது.
ஆனால் அதன் கொள்முதல் வழக்கமான அளவைவிட 10 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது. எனவே பால் கொள்முதல் மற்றும் கொள்முதலுக்கான விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை குறைந்தது 50 சதவீதமாக மாற்றுவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்த அரசின் நடவடிக்கைகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.