தமிழக மக்களுக்கு இந்த தேதியில் பொங்கல் பரிசு.. 10 வருடங்களுக்கு பிறகு புது டிசைனில் வேஷ்டி & சேலை!

0
தமிழக மக்களுக்கு இந்த தேதியில் பொங்கல் பரிசு.. 10 வருடங்களுக்கு பிறகு புது டிசைனில் வேஷ்டி & சேலை!
தமிழக மக்களுக்கு இந்த தேதியில் பொங்கல் பரிசு.. 10 வருடங்களுக்கு பிறகு புது டிசைனில் வேஷ்டி & சேலை!
தமிழக மக்களுக்கு இந்த தேதியில் பொங்கல் பரிசு.. 10 வருடங்களுக்கு பிறகு புது டிசைனில் வேஷ்டி & சேலை!

தமிழக மக்களால் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 10 வருடங்களுக்கு பிறகு பொங்கலுக்கு புதிய டிசைனில் இலவச வேட்டி, சேலை வழங்க இருப்பதை அரசு முடிவு செய்துள்ளது.

இலவச வேட்டி சேலை:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்ற ஆண்டு தமிழக அரசு சார்பில் இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆட்சியில் பொங்கலுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த ஆண்டு அவ்வாறு எதுவும் வழங்கப்படுமா என மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசின் இலவச வேஷ்டி, சேலை வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனை கூட்ட முடிவில் பல நிறங்களில் 15 டிசைன்களில் சேலை, 5 டிசைன்களில் ஆண்களுக்கான வேட்டி வழங்க இருப்பதாக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு! கல்வித்துறை உத்தரவு!

Exams Daily Mobile App Download

மேலும் ஆலோசனை கூட்டத்தில் ஜனவரி 10-ம் தேதிக்குள் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ரொக்கப்பரிசு குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!