தமிழக அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் – பணி நிரந்தர கோரிக்கை!!

0
தமிழக அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் - பணி நிரந்தர கோரிக்கை!!
தமிழக அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் - பணி நிரந்தர கோரிக்கை!!
தமிழக அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் – பணி நிரந்தர கோரிக்கை!!

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் உள்ள 947 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக உள்ளது. எனவே டிஇடி முறையினை ரத்து செய்து அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு உதவி பெறும் சிறுபான்மையின பள்ளிகள்:

தமிழகத்தில் உள்ள அரசு சிறுபான்மையின பள்ளிகளில் 2010 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட மத்திய அரசு கட்டாய கல்வி சட்டம் சார்பில் நவம்பர் மாதம் 16 ஆம் தேதிக்கு முன் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி) கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி முதல் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதிக்கு முன் வரை 947 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (டிஇடி ) கட்டாயம் என தாமதமாக அறிவிக்கப்பட்டது. இதனால் நியமிக்கப்பட்ட 947 ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியம் & மருத்துவமனை ஊழியர்கள் பணிநிரந்தரம் – அரசுக்கு கோரிக்கை!!

எனவே தமிழக அரசு, அரசு சிறுபான்மையின பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமில்லை என்பதை அறிவித்தது போல், இவர்களுக்கும் தேர்வு முறையை ரத்து செய்து அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.

இந்திய ரயில்வே துறையில் கருணை அடிப்படியிலான பணி – கால அவகாசம் நீட்டிக்க கடிதம்!!

ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலமாக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டது போல இந்த 947 ஆசிரியர்கள் கோரிக்கையும் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here