தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் 25 அம்ச கோரிக்கைகள் – தொடர் முழக்க போராட்டம்!!

0
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் 25 அம்ச கோரிக்கைகள் - தொடர் முழக்க போராட்டம்!!
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் 25 அம்ச கோரிக்கைகள் - தொடர் முழக்க போராட்டம்!!
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் 25 அம்ச கோரிக்கைகள் – தொடர் முழக்க போராட்டம்!!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அரசு ஆசிரியர்களுக்கான 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 20-ம் தேதி திருச்சியில் மாநில அளவில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

25 அம்ச கோரிக்கைகள்:

அரசு ஆசிரியர்களுக்கான 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 20-ம் தேதி திருச்சியில் மாநில அளவில் தொடர் முழக்க போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் பின்வருமாறு,

TN Job “FB  Group” Join Now

 • ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலமாக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ததற்கு அரசிடம் நன்றி தெரிவித்து கொள்கிறோம். அதே போல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை வேலை நாட்களாக கருதி பிடித்தம் செய்த பணத்தை மீண்டும் தர வேண்டும்.
 • மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

 • ஆசிரியர் பணி நியமனத்திற்கான உச்ச வரம்பு குறித்து அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
 • மேலும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்.
 • ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளவர்கள் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
 • மேலும் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கை – முதல்வர் இன்று வெளியீடு!!

 • புதிதாக அறிமுகப்படுத்திய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும்.
 • ஆசிரியர்களின் பண பலன்கள் சார்ந்த தணிக்கைத் தடைகளை விதிகளின்படி விலக்கிக் கொள்ளத்தக்க வகையில் மண்டலத் தணிக்கை ஆய்வுக் கூட்டங்கள் முறையாக நடைபெற வேண்டும்.
 • பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை ‘கற்போம் எழுதுவோம்’ திட்டப் பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் வெளியீடு – பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை!!

 • தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள அலுவலக அடிப்படைப் பணியாளர், எழுத்தர், கணினி இயக்குபவர், இரவு நேர காவலர் பணியிடங்களை விரைவில் நியமிக்க வேண்டும்.
 • தமிழகத்தில் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.
 • அரசு பணியாளர்களில் 50 வயதுக்கு மேற்பட்டோர், தொடர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி போன்றோர்களை 2021 சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – சிபிஎஸ்இ அறிவிப்பு!!

 • தொலைதூர, மலைப் பகுதிகளில் பெண் ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது.
 • புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர வேண்டும்.
 • இந்த கோரிக்கைகள் குறித்து முதல்வர் நேரில் கலந்து பேச வேண்டும்.

உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி 20 ஆம் தேதி திருச்சி கண்டோன்மென்ட், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநில அளவிலான தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் நா.சண்முகநாதன் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here