தமிழக மின்வாரியம் & மருத்துவமனை ஊழியர்கள் பணிநிரந்தரம் – அரசுக்கு கோரிக்கை!!

0
தமிழக மின்வாரியம் & மருத்துவமனை ஊழியர்கள் பணிநிரந்தரம் - அரசுக்கு கோரிக்கை!!
தமிழக மின்வாரியம் & மருத்துவமனை ஊழியர்கள் பணிநிரந்தரம் - அரசுக்கு கோரிக்கை!!
தமிழக மின்வாரியம் & மருத்துவமனை ஊழியர்கள் பணிநிரந்தரம் – அரசுக்கு கோரிக்கை!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியர் கு.ராசாமணியிடம் மனு அளித்தனர்.

குறைதீர் கூட்டத்தில் கோரிக்கைகள்:

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பாக வழங்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,

TN Job “FB  Group” Join Now

“அரசு சார்பில் தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.380 தினக்கூலி வழங்கப்படும், பணி நிரந்தரம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்திய ரயில்வே துறையில் கருணை அடிப்படியிலான பணி – கால அவகாசம் நீட்டிக்க கடிதம்!!

ஆனால் இதுவரை அதுபோல எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை. எனவே விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் எங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைப்போம்”, இவ்வாறு தெரிவித்தனர். மேலும் தற்காலிக அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஆய்வகப் பணியாளர்கள் வழங்கிய மனுவில்,

திருமணம் ஆகாத பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை – மாநில அரசு அறிவிப்பு!!

“கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 30 தற்காலிக பணியாளர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால், எங்களை பணியில் இருந்து விலக்கம் அளிக்க அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். கொரோனா காலத்தில் கூட பணியாற்றிய எங்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும். அல்லது காலிப்பணியிடங்களை நிரப்பும்போது, எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here