தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் வெளியீடு – பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை!!

0
தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் வெளியீடு - பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை!!
தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் வெளியீடு - பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை!!
தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் வெளியீடு – பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை!!

2021 ஆண்டு நிலவரப்படி அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு அல்லது பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய பெயர் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை சரிபார்த்து முதன்மை கல்வி அலுவலர் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிக்கை:

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிலவரப்படி அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் அனைத்து முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டு திருத்தம்/நீக்கம்/சேர்க்கை பெறப்பட்டதன் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட 1 முதல் 500 நபர்கள் கொண்ட பெயர் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதன்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்ட பட்டியலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி பட்டியலில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு அந்த பட்டியலை உட்படுத்தி அவர்களின் பணி விவரங்கள் சரியாக உள்ளதா என கேட்டறிந்து அவர்களின் ஒப்புதல் கையெழுத்து பெற்று ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதல் பெற்று அதனை பராமரிக்க வேண்டும்.

மத்திய அரசின் ‘நிஸ்தா’ திட்டம் – 56 லட்சம் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி!!

மேலும் மாவட்ட அளவிலான திருத்தம்/ நீக்கம்/ சேர்க்கை செய்யப்பட்ட பட்டியலை பிப்ரவரி 18 ஆம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் பெயர் நீக்கம் அல்லது சேர்க்கை செய்யும் போதும், கீழ்நிலை பணியில் இருந்து பதவி உயர்வு மூலமாக நியமனம் பெற்றவர்களின் விவரங்களை மிக கவனமாக சரிபார்த்து முதன்மை கல்வி அலுவலர் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here